
சுரங்க வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் அருண் இலக்காவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய மார்ச் 15-ம் தேதி பணமோசடி தடுப்பு ஏஜென்சி முன் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
இவர் ஜார்க்கண்ட் முதல்வரின் முதன்மை செயலாளராக இருந்தார். சில நாள்களுக்கு முன்பு, இவரது விடியோ வைரலானது. இதையடுத்து அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
ராஜீவ் அருண் பஞ்சாயத்து ராஜ் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.