எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அதானி விவகாரம்: பேரணியாகச் சென்ற எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்தம்

அதானி விவகாரத்தில், நாடாளுமன்றத்திலிருந்து புது தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

News image
Updated On :15 மார்ச் 2023, 12:22 pm

DIN

புது தில்லி: அதானி விவகாரத்தில், நாடாளுமன்றத்திலிருந்து புது தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பேரணி சென்றால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர்களிடம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதானி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேரணியாகச் சென்றனர். இதில், மதிமுக பொதுச செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

விசாரணை அமைப்புகள் மூலம் மத்திய அரசு, எதிர்க்கட்சிகளை முடக்குவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. 

அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு வலியுறுத்தி பேரணியின் நிறைவில் அமலாக்கத்துறையிடம் புகார் மனு அளிக்கவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தனர்.

முன்னதாக, மாநிலங்களவையின் எதிர்க்கட்சிக் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது அறையில் இன்று காலை 18 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சந்தித்துப் பேசினர். 

இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத்திலிருந்து அமலாக்கத்துறை நோக்கி பேரணியாகச் சென்று, அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதை வலியுறுத்தி புகார் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பகல் 12.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேரணியில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக, நாடாளுமன்றத்திலிருந்து எதிர்க்கட்சிகள் பேரணி செல்லும் நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டு, அவை நடவடிக்கைகள் முடங்கி வருகின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமும், தனது பங்குகளின் விலையை உயர்த்திக் காட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.