வாகன ஓட்டிகளுக்காக.. சாலையில் மணல் கொட்டிய காவலர்!

ஈரமான சாலையில் வாகன ஓட்டிகள் சறுக்கிவிடாமல் இருக்க, போக்குவரத்து காவலர் ஒருவர் வாளியில் மணலை எடுத்துவந்து கொட்டிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 
வாகன ஓட்டிகளுக்காக.. சாலையில் மணல் கொட்டிய காவலர்!

ஈரமான சாலையில் வாகன ஓட்டிகள் சறுக்கிவிடாமல் இருக்க, போக்குவரத்து காவலர் ஒருவர் வாளியில் மணலை எடுத்துவந்து கொட்டிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

மகாராஷ்டிரத்தில் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் ஈரம் இருந்தவண்ணமே உள்ளது. மும்பையின் பாந்தப் சந்திப்பு சாலையில் சாலையில் அதிக ஈரம் இருந்ததன் காரணமாக இருசக்கர வாகனங்கள் சறுக்கி விழுந்தன. 

வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருவதைக் கண்ட பலரும் அவரவர் வழியில் வேகமான சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர், வாளியை எடுத்து வரச்சொல்லி சற்றும் தாமதிக்காமல் மணலைக் கொண்டுவந்து சாலையில் பரவலாகக் கொட்டியுள்ளார். 

வாகன ஓட்டிகள் சறுக்காமல் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டிச்செல்லும் வகையில், சாலை முழுக்க மணலை பரப்பியுள்ளார். இதனை அப்பகுதியிலிருந்த ஒருவர் புகைப்படம் எடுத்து, போக்குவரத்து காவலரை பாராட்டி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் பலரால் பாராட்டப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com