பிகாரில் அரசியல் மாற்றம் கொண்டுவரும் நோக்கத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள தோ்தல் வியூக வகுப்பாளா் பிரஷாந்த் கிஷோருடன் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இணைந்துள்ளனர்.
பாஜக, ஐக்கிய ஜனதா தளம், திமுக, திரிணமூல் காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்தவர் பிரஷாந்த் கிஷோர்
சமீபத்தில் எந்தவொரு அரசியல் கட்சிக்காகவும் பணியாற்றமாட்டேன் என அறிவித்து, புதிய அரசியல் மாற்றம் கொண்டுவரும் நோக்கத்தில் பிகாரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்முதல் ஜன் சூரஜ் என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டார்.
பிகார் மாநிலத்தில் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கத்தில் அவர் மேற்கொண்டுள்ள இந்த பாதயாத்திரையில் (ஓய்வு பெற்றவர்கள் உள்பட) 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இணைந்துள்ளனர்.
மாநில அரசியல் தரம் மோசமடைந்துள்ளதாகவும், மாநிலத்தின் பெருமைகளை நிலைநிறுத்தும் வகையில் பிரஷாந்த் கிஷோரின் இந்த யாத்திரை அமையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மாநிலத்தின் விதியை மாற்றி புதிய பாதையை அமைக்கும் நோக்கத்தில் பிரஷாந்த் கிஷோர் செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
‘க்வாட்’ கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: சீனா எதிர்வினை!

பெரும் கவலையளிக்கிறது! தொண்டர்களுக்கு திருமா வேண்டுகோள்! | VCK
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


