திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

டி.கே.சிவகுமாரை எதிர்த்து போட்டியிட்ட 14 வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பு!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாரை எதிர்த்து போட்டியிட்ட 14 வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர். 

News image
Updated On :13 மே 2023, 4:58 pm IST


பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாரை எதிர்த்து போட்டியிட்ட 14 வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர். 

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் மே 10-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 224 தொகுதிகளிலும் சராசரியாக 72.67 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 224 தொகுதி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 2,615 வேட்பாளா்கள் போட்டியிட்டுள்ளனா். காங்கிரஸ் - 223 பேர் போட்டியிட்டுள்ளனர்.

இந்நிலையில், கா்நாடகம் முழுவதும் 58,545 வாக்குச் சாவடிகளில் 75,603 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குகள் மாநிலம் முழுவதும் 34 மையங்களில் சனிக்கிழமை (மே 13) காலை 8 மணிக்கு தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன. 

தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 138 இடங்களிலும், பாஜக 62 இடங்களிலும், மஜத 20 இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

தொடர்ந்து பல சுற்று முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் முன்னிலை எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது. 

கர்நாடகத்தில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது. 

இந்நிலையில், கர்நாடக தேர்தலில் மூத்த தலைவர் சித்தராமையா வருணா தொகுதியிலும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் கனகபுரா தொகுதியிலும், முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவடி அதானா தொகுதியிலும், முன்னாள் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் காந்தி நகர் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

தேவாங்கரே தெற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 92 வயதான மூத்த தலைவர் சாமனூர் சிவகங்கரப்பா மகத்தான வெற்றி பெற்றுள்ளார். 

14 பேர் டெபாசிட் இழப்பு: கனகபுரா தொகுதியில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரை எதிர்த்து போட்டியிட்ட 14 பேரும் டெபாசிட்டை இழந்துள்ளனர்.

கனகபுரா தொகுதியில் 1.90 லட்சம் வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், சிவகுமார் சுமார் 1.43 லட்சம் வாக்குகளை பெற்று சுமார் 1.22 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட மஜத வேட்பாளர் 20,631 வாக்குகளும், பாஜக வேட்பாளர் 19,753 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவியுள்ளனர். இவரை எதிர்த்து போட்டியிட்ட 14 பேரும் டெபாசிட் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.