2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கர்நாடக மக்களின் தீர்ப்பை மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறோம்: எடியூரப்பா

கர்நாடகத்தில் மக்களின் தீர்ப்பை நாங்கள் மரியாதையுடன் ஏற்றுக்கொள்வதாக பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். 

News image
Updated On :13 மே 2023, 9:53 am

DIN

கர்நாடகத்தில் மக்களின் தீர்ப்பை நாங்கள் மரியாதையுடன் ஏற்றுக்கொள்வதாக பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 138 இடங்களிலும், பாஜக 62 இடங்களிலும், மஜத 20 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 

தொடர்ந்து பல சுற்று முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், தொடர்ந்து காங்கிரஸ் 41 தொகுதிகளிலும், பாஜக 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 

தேர்தல் தோல்வி குறித்து பாஜக மூத்த தலைவர் கூறுகையில், 

பாஜகவுக்கு வெற்றி தோல்வி ஒன்றும் புதிதல்ல. இந்த முடிவுகளால் கட்சி தொண்டர்கள் சோர்ந்துவிடவில்லை. கட்சியின் பின்னடைவு குறித்து ஆய்வு செய்வோம். மக்களின் இந்த தீர்ப்பை மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.