கர்நாடக முதல்வரை கட்சித் தலைமையே முடிவு செய்யும்: தீர்மானம்
கர்நாடக முதல்வரை தலைமை முடிவு செய்ய வேண்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


கர்நாடக முதல்வரை தலைமை முடிவு செய்ய வேண்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மேலிட பார்வையாளர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவாரியான (136) இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதற்கு 113 இடங்கள் தேவை. இதைத் தொடா்ந்து, ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாநிலத்தின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்காக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் இன்று (மே 14) மாலை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட சுஷில்குமார் ஷிண்டே, தீபக் பவாரியா, பன்வார் ஜித்தேந்திரா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கர்நாடக முதல்வரை கட்சி தலைமை முடிவு செய்ய வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...