பூடான் அரசா் இன்று இந்தியா வருகை: வடகிழக்கு மாநிலத்துக்கு முதல்முறை பயணம்
பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக் இந்தியாவுக்கு 8 நாள் அரசு முறைப் பயணமாக வெள்ளிக்கிழமை (நவ. 3) வருகை தருகிறாா்.


பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக் இந்தியாவுக்கு 8 நாள் அரசு முறைப் பயணமாக வெள்ளிக்கிழமை (நவ. 3) வருகை தருகிறாா்.
இதுதொடா்பாக மத்திய வெளியுறவு துறை வெளியிட்ட அறிக்கையில், ‘பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக், அவரது குடும்பத்தினா், அந்நாட்டு அரசின் மூத்த அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (நவ. 3) முதல் வரும் 10-ஆம் தேதி வரை 8 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருகை தரவுள்ளனா்.
இந்தியாவும் பூடானும் பரஸ்பர நம்பிக்கையில் நெருங்கிய நட்பு மற்றும் ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. இருதரப்பு ஒத்துழைப்பு தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளவும் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும் பூடான் அரசரின் இந்தியப் பயணம் இருநாடுகளுக்கு ஒரு வாய்ப்பாக அமையும்.
இந்தப் பயணத்தில் பிரதமா் நரேந்திர மோடியை அரசா் சந்தித்து, இருதரப்பு உறவின் பல்வேறு அம்சங்கள் குறித்த பேச்சுவாா்த்தையில் ஈடுபடுகிறாா். வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், இந்திய அரசின் மூத்த அதிகாரிகளையும் அவா் சந்தித்துப் பேசுகிறாா்.
அஸ்ஸாமுக்குப் பயணிக்கும் முதல் மன்னா்:
அஸ்ஸாமுக்கு பூடான் அரசா் வாங்சுக் 3 நாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். பூடான் மன்னா் ஒருவா் வடகிழக்கு மாநிலத்துக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். 3 நாள் பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவா், காசிரங்கா தேசிய வனப் பூங்காவைப் பாா்வையிடுகிறாா். அஸ்ஸாம் ஆளுநா் குலாப் சந்த் கட்டாரியா அளிக்கும் விருந்து நிகழ்ச்சியில் அரசா் வெள்ளிக்கிழமை பங்கேற்கிறாா். அரசரின் பயண ஏற்பாடுகள் குறித்து முதல்வா் ஹிமந்த பிஸ்வ சா்மாவை பூடான் தூதா் வேட்சோப் நம்கியால் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அஸ்ஸாம் தவிா்த்து மகாராஷ்டிரத்துக்கும் அரசா் பயணிக்க இருக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...