கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இதை செய்தால் மாத சம்பளத்தில் பாதியைத் தருகிறேன்: உச்சநீதிமன்ற நீதிபதி!

வழக்குரைஞர்கள் நீதிபதிகளை மை லார்ட் என அழைப்பது வழக்கம். அதனை மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார் உச்ச நீதிமன்ற நீதிபதி.

News image
நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா
Updated On :3 நவம்பர் 2023, 10:51 am

DIN

2006-ம் ஆண்டு பார் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், வழக்குரைஞர்கள் நீதிபதியை மை லார்ட் என்றோ யுவர் லார்ட்ஷிப் என்றோ அழைக்க வேண்டியதில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது எங்கும் நடைமுறையில் இல்லை.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா மூத்த வழக்குரைஞர் அவரது வாதத்தின்போது பயன்படுத்திய  ‘மை லார்ட்’ என்கிற வார்த்தையைக் குறிப்பிட்டு, “உங்களுக்கு எத்தனை முறை சொல்வது  ‘மை லார்ட்ஸ்’? இப்படி அழைப்பதை நீங்கள் நிறுத்தினால் எனது மாத சம்பளத்தில் பாதியைத் தருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

அக்.3 புதன்கிழமை, வழக்கமான நீதிமன்ற பணியில் மூத்த நீதிபதி ஏ.எஸ். போபண்ணா உடனான அமர்வில் வழக்குரைஞரின் வாதத்தைக் கேட்ட நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”இதற்கு மாற்றாக நீங்கள் ஏன் சார் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது” எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

லார்ட் (கடவுள்) என்கிற வார்த்தை காலனியாதிக்க சொற்பயன்பாடு ஆகும். இது அடிமை முறையின் கூறாகவும் கருதப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.