சசி தரூர்: மிசோரமில் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதி!

மிசோரமில் அடுத்து ஆட்சியமைக்கப்போவது காங்கிரஸ்தான் என செய்தியாளர் சந்திப்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளார் சசி தரூர்.
சசி தரூர்
சசி தரூர்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர், மிசோரமில் அடுத்த ஆட்சி அமைக்கப்போவது காங்கிரஸ்தான் என செய்தியாளர் சந்திப்பில் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். 

சசி தரூர் பேசும்போது, காங்கிரஸ் கட்சி வடகிழக்கு மாநிலங்களில் மிசோரமில் தான் முதலில் ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்துளார். 2014-ல் இழந்த ஆட்சியை இப்போது பிடிப்பது உறுதி எனவும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கடைசியாக ஆட்சி செய்த மாநிலம் மிசோரம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தி, அதனை இந்தியாவின் மிகப்பெரும் பலமாக மாற்றியது காங்கிரஸ். மேலும், அதனைக் குலைக்கும் நோக்கில் அமைந்துள்ள  ‘ஒரே நாடு, ஒரேமொழி, ஒரே கலாச்சாரம்’ என்ற கொள்கையை கண்டிப்பாக எதிர்க்கும் எனவும் தெரிவித்தார்.

பன்முகத்தன்மையால் மட்டுமே இந்தியாவில் ஒற்றுமையை நிலைநாட்ட முடியும் எனவும் கூறினார். 

மேலும், இத்தனை ஆண்டுகால ஆட்சியில், பா.ஜ.க அளித்த எந்த உறுதியையும்  நிறைவேற்றவில்லை, அது வங்கிக்கணக்கில் வந்திருக்கவேண்டிய 15 லட்சமாக இருக்கட்டும் அல்லது இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவதாகச் சொன்னதாகட்டும், எதுவும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார் சசி தரூர். 

மிசோரம்  40 தொகுதிகளுக்கான சட்ட பேரவைத் தேர்தல், வரும் நவம்பர் 7 அன்று ஒரே கட்டமாக நடத்தப்படவுள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com