ராஜஸ்தானில் 6-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!

வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளில் 6-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ராஜஸ்தான் பாஜக
ராஜஸ்தானில் 6-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 6-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி இன்று (நவம்.6) வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸும், ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் முனைப்பு காட்டி வருகின்றன. 

மாநிலத்தில் உள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக சாா்பில் களம் காணும் 83 போ் கொண்ட முதல் பட்டியலையும், அதனைத் தொடா்ந்து 41 போ் கொண்ட இரண்டாவது பட்டியலையும் வெளியிட்ட பாஜக, நவ. 2ஆம் தேதி 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலையும், நவ.4ஆம் தேதி 2 வேட்பாளர்கள் மட்டுமே அடங்கிய 4-ம் கட்ட பட்டியலையும், நவ.5ஆம் தேதி 15 பேர் கொண்ட ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது.

இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று (நவம்.6) 3 வேட்பாளர்கள் மட்டுமே கொண்ட ஆறாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் காங்கிரசில் இருந்து பாஜகவிற்கு வந்த கிரிராஜ் சிங் பாரி தொகுதியிலும், தீபக் பார்மெர் தொகுதியிலும் மற்றும் அருண் சௌத்ரி பச்பத்ரா தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தானில் நவம்பர் 25-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. டிசம்பர் 3 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். 

2018-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும் வென்றது. பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு காங்கிரசை சேர்ந்த அசோக் கெலாட் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com