கேரள குண்டுவெடிப்பு: குற்றம் சாட்டப்பட்டவருக்கு 10 நாள்கள் போலீஸ் காவல்!

கேரள குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டொமினிக்  மார்ட்டினை 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கேரள குண்டுவெடிப்பு: குற்றம் சாட்டப்பட்டவருக்கு 10 நாள்கள் போலீஸ் காவல்!

கேரள குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரை 10 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கேரள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள டொமினிக் மார்ட்டினை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டுமென்ற காவல்துறையின் கோரிக்கையை ஏற்று முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹனி எம். வர்கீஸ் அனுமதியளித்தார்.

அக்டோபர் 29-ஆம் தேதி எா்ணாகுளம் மாவட்டம், களமச்சேரியில் 'யெகோவாவின் சாட்சியங்கள்’ என்ற கிறிஸ்துவ மதப் பிரிவு நடத்திய வழிபாட்டுக் கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 4 போ் உயிரிழந்தனா். ஐம்பதுக்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா். 

குண்டுவெடிப்பு நிகழ்ந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு டொமினிக் மார்ட்டின் காவல்துறையில் சரணடைந்ததை அடுத்து, அக்டோபர் 31-ம் தேதி அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். 

தொடர்ந்து இன்று (நவம்பர் 6) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரது வருமான ஆதாரங்கள், சர்வதேச தொடர்புகள் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர்.

மேலும், ஆதாரங்களை சேகரிப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ள மார்ட்டினை குறிப்பிட்ட சில இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கோரினர்.

அதையடுத்து மார்ட்டினை 10 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையில், தனக்குத் தானே ஆஜராகி வாதாடிக் கொள்வதாக கூறியுள்ள டொமினிக் மார்ட்டின், வழக்கறிஞரின் சட்ட உதவியை இன்று மீண்டும் மறுத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com