உத்தரப் பிரதேசம்: தீபாவளியன்று பட்டாசு விபத்தில் காயமடைந்த சகோதரர்கள் பலி

உத்தரப் பிரதேசத்தில் தீபாவளியன்று ஏற்பட்ட பட்டாசு விபத்தில் காயமடைந்த 13 பேரில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேசம்: தீபாவளியன்று பட்டாசு விபத்தில் காயமடைந்த சகோதரர்கள் பலி

உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 13 பேரில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் உள்ள பட்டாசு சந்தையில் தீபாவளியன்று ஏற்பட்ட பட்டாசு விபத்தில் காயமடைந்த 13 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் அந்த 13 பேரில் இரண்டு சிறுவர்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர். சகோதரர்களான சுஷில் மற்றும் தாஸ் ஆகியோர்  ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள். 

ஆக்ராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுஷில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது சகோதரர் தாஸும் உயிரிழந்தார். 

அவர்களது மூன்றாவது சகோதரரான அனில் ஆக்ராவில் உள்ள மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். மற்ற 8 பேரும் தில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மதுரா மாவட்ட மாஜிஸ்ட்ரேட் சைலேந்திர குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சந்தையில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 13 பேர் தீக்காயம் அடைந்துள்ளனர். ஆனால் விபத்திற்கான காரணம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.” என்று தெரிவித்தார். 

இந்த சம்பவம் குறித்துப் பேசிய துணை முதல்வர் பிரிஜேஷ் பதக், “இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.” என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com