நாய்க்கடியைப் பொருத்து மாநில அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாய்க்கடியின் அளவைப் பொருத்து இழப்பீடு வழங்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாய்க்கடியைப் பொருத்து மாநில அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாய்க்கடியின் அளவைப் பொருத்து இழப்பீடு வழங்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வழங்கிய தீர்ப்பில், யாரையேனும் நாய் கடித்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு மாநில அரசாங்கமே முதன்மைப் பொறுப்பாகும் என்றும், குறைந்தபட்ச இழப்பீடாக ஒரு பல் குறிக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும் அந்த தீர்ப்பில், "ஒருவேளை நாய் கடித்ததால் தோலில் இருந்து சதையை அகற்றும் அளவுக்கு காயம் ஏற்பட்டிருந்தால், ​​0.2 செ.மீ காயத்திற்கு குறைந்தபட்சம் 20,000 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்" என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாய்க் கடி சம்பவங்கள் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையின் போது இந்த தீர்ப்பினை வழங்கியது.

இத்தகைய இழப்பீட்டினைத் தீர்மானிப்பதற்காக அந்தந்த மாவட்டங்களின் துணை ஆணையர்கள் தலைமையில் குழுக்களை அமைக்குமாறு பஞ்சாப், ஹரியாணா மாநில அரசுகளுக்கும், சண்டிகர் யூனியன் பிரதேச அரசுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

"உரிய ஆவணங்களுடன் இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கு நான்கு மாதங்களுக்குள் இந்த கமிட்டிகளால் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மாநில அரசாங்கத்தின் வருவாயில் இருந்து இந்த இழப்பீட்டினை வழங்க வேண்டும். இதற்கு மாநில அரசுகளே முதன்மைப் பொறுப்பாகும்” என்று நீதிபதி வினோத் எஸ்.பரத்வாஜ் தீர்ப்பளித்தார்.

நாடு முழுவதும் நாய்க் கடி வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

தினசரி 70 முதல் 80 வரையிலான நாய் கடி சம்பவங்கள் பதிவாகின்றன, மேலும் இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் 150-180 ஊசிகள் செலுத்தப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத் நாய்க்கடி நிகழ்வுகளில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com