ராஜஸ்தான்: காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர் காலமானார்

வரவிருக்கும் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர்(75) புதன்கிழமை அதிகாலை காலமானார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜெய்ப்பூர்: வரவிருக்கும் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர்(75) புதன்கிழமை அதிகாலை காலமானார். 

குர்மீத் சிங் கூனர் உடல்நலக் குறைவு காரணமாக தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார். 

இதையடுத்து அவரது குடும்பத்தினர் ராஜஸ்தானில் உள்ள அவரது சொந்த ஊரான ஸ்ரீ கங்காநகருக்கு அவரது உடலை எடுத்துச் சென்றதாக அவரது மகன் தெரிவித்தார்.

கூனர் 1998, 2008 மற்றும் 2018-களில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் கரன்பூர் தொகுதி போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். 

முதல்வர் அசோக் கெலாட் இரங்கல்
மூத்த காங்கிரஸ் தலைவர் குர்மீத் சிங் கூனர் மறைவுக்கு முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கரன்பூர் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான குர்மீத் சிங் கூனரின் மறைந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்தது. நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதிலும், ஸ்ரீ கூனர் தனது தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்காக எப்போதும் பாடுபட்டு வந்தார். கூனர் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக வரும் 25-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

ஆளும் காங்கிரஸும் பிரதான எதிா்க்கட்சியான பாஜகவும் பலப்பரீட்சை நடத்தும் இத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது.

கடந்த 6-ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கலில், பாஜக, காங்கிரஸ் வேட்பாளா்கள், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 2,605 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதையடுத்து, கடந்த 7-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் 240 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளா் பட்டியலில் மொத்தம் 1,875 போ் இடம்பெற்றுள்ளனா். இதில் 183 போ் பெண் பெண்கள் ஆவா்.

ராஜஸ்தானில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை சுமாா் 5.26 கோடியாகும். இதில் பெண்கள் சுமாா் 2.51 கோடி போ். இங்கு ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸும், ஆட்சியை பிடிக்க பாஜகவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 3-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com