'இஸ்ரேல் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்' - பிரதமர் மோடி

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
தெற்கு உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் காணொலி வாயிலாக பேசிய பிரதமர் மோடி
தெற்கு உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் காணொலி வாயிலாக பேசிய பிரதமர் மோடி
Published on
Updated on
2 min read

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இரண்டாவது உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் காணொலி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, 'கடந்த ஜனவரியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் வளர்ந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அந்தவகையில் தெற்கு உச்சி மாநாட்டின் குரல் உலகில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

மேற்கு ஆசியாவில் நடைபெறும் சம்பவங்களில் இருந்து புதிய சவால்கள் உருவாகி வருகின்றன. உலகளாவிய நன்மைக்காக தெற்கு நாடுகள் ஒற்றுமையுடன் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியது அவசியம். 

அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருந்தது. நாங்கள் இந்த விஷயத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்திருக்கிறோம். போர் குறித்த பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெறும் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். 

பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் பேசிய பிறகு இந்தியாவில் இருந்து பாலஸ்தீனத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறோம். எனவே, உலகளாவிய நலனுக்காக தெற்கு நாடுகள் ஒன்றுபட வேண்டிய நேரம் இது' என்று பேசியுள்ளார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு காலத்தில் தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com