ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

ம.பி.யில் ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறு வாக்குப்பதிவு!

தேர்தல் ஆணையத்தின் உத்தரவையடுத்து, மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

News image

கோப்புப்படம்

Updated On :21 நவம்பர் 2023, 12:34 pm IST

தேர்தல் ஆணையத்தின் உத்தரவையடுத்து, மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

மத்தியப் பிரதேசத்தில் 230 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த நவ. 17 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், அந்த மாநில வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் 76.22 சதவீத வாக்குகள் பதிவாகின. 

வாக்குப்பதிவு நாளன்று பிந்த் தொகுதியில் உள்ள கிஷுபுராவில் வாக்குச்சாவடி மையம் 71-ன் கீழ் உள்ள சாவடி எண் 3-ல் சிலர் வாக்குப்பதிவு செய்ததை விடியோ எடுத்துள்ளனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அந்த ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி இன்று(நவ. 21) கிஷுபுரா வாக்குச்சாவடியில் உள்ள வாக்குச்சாவடி எண் 3-ல் காலை 7 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  

வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து வருவதாகவும் பாதுகாப்புப் படையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பிந்த் மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.