இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சாலை மறியலில் கரும்பு விவசாயிகள்!

கரும்பு விவசாயிகள் மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

News image
கோப்புப்படம்.
Updated On :23 நவம்பர் 2023, 12:50 pm

DIN

மகாராஸ்டிர மாநிலம் கொல்ஹாப்பூரில் உள்ள மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு தங்களிடம் வாங்கப்பட்ட கரும்புகளுக்கு நியாயமான மற்றும் லாபகரமான விலையின் (FRP) அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய கூடுதல் தொகையை வழங்கிடக்கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

கொல்ஹாப்பூரில் உள்ள விவசாயிகள் சங்கத்தின் தலைவரும் இந்த போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ராஜு ஷெட்டி, கடந்த ஆண்டு வாங்கப்பட்ட கரும்பில் ஒரு டன்னுக்கு கூடுதலாக 100 ரூபாய் வீதம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத் தெரிவித்துள்ளார். 

மேலும் கடந்த ஆண்டுக்கான கூடுதல் தொகையை வழங்க மறுக்கும் மில் உரிமையாளர்கள், அடுத்த ஆண்டிலிருந்து கூடுதல் 100 ரூபாயுடன் கரும்பு வாங்குவதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டுக்கான தொகை வழங்கப்படாமல் போராட்டம் நிறுத்தப்படாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் நெடுஞ்சாலை இன்னும் முடக்கப்பட்டிருப்பதாகவும், வாகனங்கள் வேறு வழியில் திருப்பப்பட்டு வருவதாகவும் கொல்ஹாப்பூரின் காவல் கண்காணிப்பாளர் மஹேந்திர பண்டித் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.