அப்போது அவர் பேசியதாவது: பாஜக தலைமையிலான அரசு மத்தியப் பிரதேசத்தை நாட்டின் 10 சிறந்த மாநிலங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. மத்தியப் பிரதேசத்தை நாட்டின் முதல் 3 சிறந்த மாநிலங்களில் ஒன்றாக உருவாக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். மத்தியப் பிரதேசத்தின் நலனுக்காக கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் எந்த ஒரு வளர்ச்சியையும் கொண்டு வரவில்லை. 60 ஆண்டுகள் என்பது குறைவான ஆண்டுகள் கிடையாது. 9 ஆண்டுகளில் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ளது என்றால் 60 ஆண்டுகளில் கண்டிப்பாக வளர்ச்சி என்பது ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் மாநிலத்துக்கு வளர்ச்சியை கொடுக்கவில்லை. ஏழை மக்களின் உணர்வுகளோடு காங்கிரஸ் விளையாடுகிறது. சாதியின் பெயரில் மக்களை காங்கிரஸ் பிளவுப்படுத்துகிறது என்றார்.