

உத்தரப் பிரதேசத்தில் கார்-லாரியில் மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.
வாராணசி-லக்னௌ நெடுஞ்சாலையில் கார்கியாவ் பகுதியில் வாராணசியில் ஜான்பூருக்குச் சென்றுகொண்டிருந்த போது கார் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்து 8 பேர் பலியாகினர். மூன்று வயதுக் குழந்தை பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றது.
சம்பவ இடத்திலிருந்த சடலங்களை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.