சிக்கிம் சுற்றுலா கனவு கொடுங்கனவானதே..

சிக்கிம் மாநிலத்துக்குச் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற வாழ்நாள் கனவு இப்படி கொடுங்கனவாகிவிட்டதே என, சிக்கிம் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.
சிக்கிம் சுற்றுலா கனவு கொடுங்கனவானதே..


சிக்கிம் மாநிலத்துக்குச் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற வாழ்நாள் கனவு இப்படி கொடுங்கனவாகிவிட்டதே என, சிக்கிம் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.

சிக்கிமில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் காணாமல்போன 22 ராணுவ வீரா்கள் உள்பட 102 பேரை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இது மேக வெடிப்பு எனப்படும் மிகக் கனமழை காரணமாக பனிப்பாறை ஏரி நிரம்பி வழிந்ததன் விளைவாக நிலைமை மிகவும் மோசமானது. அதாவது, ஒரு பனிப்பாறை ஏரி நிரம்பி வழிவது என்பது, பொதுவாக அதிகப்படியான மழையால் ஏற்படும் வெள்ளத்தை விட அதிக சேதத்தையும் அழிவையும் விளைவிக்கிறது என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில், சிக்கிமிலும் அதே பயங்கர நிகழ்வு நேரிட்டுள்ளது.

குஜராத்திலிருந்து குடும்பத்துடன் சிக்கிமுக்கு சுற்றுலா சென்ற சைலேந்திர குமார் என்ற சுற்றுலா பயணி, கூறுகையில், எல்லாம் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. புதன்கிழமை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு எங்கள் திட்டங்களை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டது.

சிக்கிமின் பல மாவட்டங்களுக்கும் சென்றோம். அங்கு கண்கொள்ளாக் காட்சிகள் கிடைத்தன. வானிலையும் சிறப்பாகவே இருந்தது.  பெல்லிங் வந்த போது, புதன்கிழமை காலையில்தான் பிரச்னை ஆரம்பித்தது. பெல்லிங்கிலிருந்து திரும்பும்போது நிலச்சரிவால் நடுவழியில் சிக்கிக்கொண்டோம் என்று டார்ஜிலிங் பகுதியிலிருந்து பிடிஐக்கு தொலைபேசி வாயிலாக தகவலை அளித்துள்ளார்.

மழை மற்றும் வெள்ளம், நிலச்சரிவின்போது நடுவழியில் சிக்கிக்கொண்டு தவித்தோம். ஆனால், எனக்குத் தெரிந்த சிலர் மூலம் டார்ஜிலிங் வந்தடைந்தோம். எங்கு நாங்கள் சிக்கியிருந்தோம் என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை என்கிறார்.

சிக்கிமில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகளில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 138 மாணவ, மாணவிகளும் அடங்கும். இவர்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து, ரயில் மூலம் கொல்கத்தாவை அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com