கடன்தொல்லை: கர்நாடக பெண் விவசாயி தற்கொலை
கர்நாடக மாநிலம் சிக்கமங்களூரு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விவசாயி, கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிக்கமங்களூரு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விவசாயி, கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சிறிய நிதி நிறுவனத்திடமிருந்து அவர் பெற்ற கடனுக்காக, நிறுவன ஊழியர்கள் தொல்லை கொடுத்ததால், அவர் இந்த துயர முடிவை எடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க.. இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: விமான நிலையங்களில் குவியும் வெளிநாட்டினர்
கடுரு தாலுகா, தங்கலி கிராமத்தைச் சேர்ந்த 64 வயது தேவிரம்மா என்ற விவசாயி, அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நிதி நிறுவனத்திடமிருந்து 78 ஆயிரம் ரூபாய் கடன் பெற்ற நிலையில், விவசாயம் பாதித்ததால் அவரால் கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. நிதி நிறுவன ஊழியர்கள் வாரந்தோறும் இவரது வீட்டுக்கு வந்து கடனைத் திருப்பிக்கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர். இதனால் மனம் உடைந்த தேவிரம்மா, தற்கொலை செய்துஎகாண்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நிதி நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...