கடந்த 10 ஆண்டுகளில் 3,100 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளதாக ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
தில்லி கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டில் ஆம் ஆத்மியை சேர்ந்த தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
அதேபோல், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தில்லியின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகவ் சத்தா,
“பாஜக ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் அமைதியாகவும், பிற மாநிலங்களில் ஆக்ரோஷமாக செயல்பட்டு வருகின்றன. 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அமலாக்கத்துறை 112 இடங்களில் மட்டுமே சோதனை செய்துள்ளது.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் 3,100 இடங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பதிவு செய்த வழக்குகளில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மீது 95 சதவிகிதம் வழக்குகளை பதிவு செய்துள்ளார்கள்.
இதையும் படிக்க | ஹமாஸ்: யார்? என்ன விரும்புகிறது? தாக்குதல் ஏன்?
ஆம் ஆத்மியின் மீது தனிப்பட்ட அன்பு இருப்பதால்தான் எங்களின் தலைவர்களை சிறையில் அடைத்துள்ளனர். இதெல்லாம் இந்தியா கூட்டணியின் மீதுள்ள பயத்தால் செய்து வருகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.