பாலஸ்தீனத்திலிருக்கும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்கள்

பாலஸ்தீனத்திலிருக்கும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்கள்

பாலஸ்தீனத்திலிருக்கும் இந்தியர்களுக்கு, அவசர கால உதவி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளன.


புது தில்லி: கடுமையான போர் நடைபெற்று வரும் பாலஸ்தீனத்திலிருக்கும் இந்தியர்களுக்கு, அவசர கால உதவி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

பாலஸ்தீனத்தில் இருக்கும் இந்தியர்கள் எந்தவிதமான அவசர காலத்திலும் உதவி தேவைப்படும்போதும், 24 மணி நேரமும் இந்த அவசரகால உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கான பிரதிநிதிகள் அலுவலகம் அறிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கான பிரதிநிதிகள் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியர்கள் ஏதேனும் அவசர உதவி தேவைப்படின் 0592-916-418 என்ற தொலைபேசி எண்ணிலும், +970-592916418 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், அலுவலக எண்களும் மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தொலைபேசி எண் 00970-2-2903033/4/6 என்ற எண்ணிலும், rep.ramallah@mea.gov.in மற்றும் hoc.ramallah@mea.gov.in என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை (அக்.7) அதிகாலை ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினா்; இதில் 200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியா்கள் உயிரிழந்தனா். ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பலரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினா் பிடித்துச் சென்றனா்.

இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து போா் பிரகடனம் செய்த இஸ்ரேல், ஹமாஸ் படையினரைக் குறிவைத்து தொடா் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் இருதரப்பிலும் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com