தில்லியில் மேல்தட்டு மக்களுக்காக பிரீமியம் பேருந்துகள் அறிமுகம்!

தில்லியில் மேல்தட்டு மக்களுக்காக பிரீமியம் பேருந்துகள் அறிமுகம்!

தில்லி மேல்தட்டு மக்களும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் வகையில் பிரீமியம் பேருந்து சேவையை அந்த மாநில அரசு தொடங்கவுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 
Published on

தில்லி மேல்தட்டு மக்களும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் வகையில் பிரீமியம் பேருந்து சேவையை அந்த மாநில அரசு தொடங்கவுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால், 

பிரீமியம் பேருந்து சேவையை துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவின் ஒப்புதலுக்குப் பிறகு இந்தத் திட்டம் அறிவிக்கப்படும். 

தில்லியில் மாசு அளவைக் குறைக்கவும், தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்தில் பிரீமியம் பேருந்து சேவைக்கான திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

தில்லியில் மெட்ரோ ரயில் தொடங்கியபோது, இருசக்கர வாகனப் பயன்பாட்டை நிறுத்திவிட்டு, மெட்ரோவில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகமானது. ஆனால், மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதிய நிலையில், மீண்டும் தனது சொந்த வாகனங்களை மக்கள் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

பிரீமியம் பேருந்து திட்டத்தின் மூலம் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வகுப்பினரைச் சேர்ந்தவர்களும் பொதுப் போக்குவரத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். 

இந்தத் திட்டத்தின் கீழ் உரிமம் பெறுபவர்கள் ஒன்பது இருக்கைகளுக்கு குறையாத குளிரூட்டப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்து கட்டணம் டிஜிட்டல் முறையிலும், அமர்ந்து பயணிக்கும் வகையிலும் வசதி செய்ய வேண்டும். ஜனவரி 1,2025-ஆம் ஆண்டிற்குப் பிறகு வாங்கப்படும் அனைத்து பேருந்துகளும் மின்சாரத்தில் இயக்கப்படும். 

இந்தப் பேருந்துகளுக்கான டிக்கெட் கட்டணம் தேவை மற்றும் விநியோகத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com