ககன்யான் சோதனை வெற்றி: இஸ்ரோ அறிவிப்பு

ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலத்தின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
ககன்யான் சோதனை வெற்றி: இஸ்ரோ அறிவிப்பு

ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலத்தின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

2025ல் மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா சோதனை விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சனிக்கிழமை (அக். 21) காலை 10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

டிவி - டி1 ராக்கெட் மூலம் தரையில் இருந்து 17 கிலோ மீட்டா் தொலைவு வரை விண்கலத்தை அனுப்பி மீண்டும் தரையிறக்கப்பட்டது.

சரியாக 16.6 கிமீ தூரம் சென்றதும் விண்கலத்தில் வீரர்கள் இருக்கும் பகுதி தனியாகப் பிரிந்த பின்னர், பாராசூட் மூலமாக விண்கலம் மட்டும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கிலோ மீட்டா் தொலைவில் வங்கக்கடலில் இறக்கப்பட்டது. தொடர்ந்து, கடலிலிருந்து கலன் மீட்கப்படும். 

​இந்த சோதனை முடிந்ததையடுத்து, 'ககன்யான் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். 

மேலும் இஸ்ரோவில் விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். 

சனிக்கிழமை (அக். 21) காலை 8 மணிக்கு சோதனை விண்கலம் விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாதிரி விண்கல சோதனை தாமதமாக 10 மணிக்கு ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com