

நாடு முழுவதும் ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் மோடி இன்று வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசுகையில்,
பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களும் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் ரோஜ்கர் மேளளா நடத்தி வருவதாகவும், அதுவரை லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவது மட்டுமின்றி வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளோம். அதன்படி காணொளி வாயிலாக இந்தாண்டு 51 ஆயிரம் பேருக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய மற்றும் வளர்ந்து வரும் துறைகளான எரிசக்தி, பாதுகாப்புத் தொழில் மற்றம் ஆட்டோமேஷன் போன்றவற்றில் தனது அரசாங்கம் வேலை வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.
இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.