விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பா.ஜ.க.விலிருந்து விலகினார் நேதாஜி பேரன்!

2016 முதல் 2020 வரை மேற்கு வங்க மாநில பாஜக துணைத் தலைவராக செயல்பட்டார் சந்திரபோஸ்.

News image

சந்திரபோஸ்

Updated On :6 செப்டம்பர் 2023, 2:53 pm

DIN

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன், சந்திரபோஸ் பாஜகவிலிருந்து இன்று (செப். 6) விலகினார். 

சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நினைத்தபடி மக்களிடம் கொண்டுசெல்ல பாஜக ஆட்சியில் இயலவில்லை என்பதால், கட்சியிலிருந்து விலகுவதாக விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக பாஜக தேசியச் செயலர் ஜெ.பி. நட்டாவுக்கு சந்திரபோஸ் எழுதியுள்ள ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ''பிரதமர் நரேந்திர மோடியின் பரந்த திட்டங்களால் ஈர்க்கப்பட்டு 2016-ல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தேன். 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் சரத் சந்திரபோஸ் ஆகியோரின் ஒருங்கிணைந்த கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் பாஜகவில் செயல்பட்டேன். ஆனால், அதை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை.

சுபாஷ் சந்திரபோஸ் கொள்கைப்படி மதம், சாதி, கோட்பாடுகளைக் கடந்து ஆசாத் ஹிந்த் மோர்ச்சா என்ற அமைப்பின்கீழ் அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்க நினைத்தேன். நாட்டின் ஒற்றுமைக்கு இது மிகவும் அவசியம். 

இந்த இலக்கை எட்ட மத்திய மற்றும் மாநில பாஜக எந்தவகையிலும் எனக்கு உதவவில்லை. மாநில மக்களை இணைக்கும் வங்காள வியூகத்தை பாஜவிடம் பரிந்துரைத்தேன். ஆனால், என் பரிந்துரை நிராகரிக்கப்பட்டது'' எனக் குறிப்பிட்டுள்ளார். 

2016 முதல் 2020 வரை மேற்கு வங்க மாநில பாஜக துணைத் தலைவராக செயல்பட்டார் சந்திரபோஸ். 2016 மற்றும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.