/

ஜி20 விருந்தில் பங்கேற்க இன்று மதியம் தில்லி செல்கிறார் மம்தா! 

ஜி20 மாநாட்டில் இரவு விருந்தில் பங்கேற்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை பிற்பகல் புது தில்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். 

News image
Updated On :8 செப்டம்பர் 2023, 7:01 am

DIN

ஜி20 மாநாட்டில் இரவு விருந்தில் பங்கேற்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை பிற்பகல் புது தில்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். 

தலைநகர் தில்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது. செப்டம்பர் 9ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சார்பில் வழங்கப்படும் இரவு விருந்தில் பல்வேறு நாட்டு அதிபர்களும், உள்நாட்டு தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். 

உலகத் தலைவர்களின் ஜி20 உச்சி மாநாடு பிரகதி மைதானத்தில் பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. முர்முவின் அழைப்பை ஏற்று இரவு விருந்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பிற்பகல் புது தில்லிக்குச் செல்கிறார். 

தேசிய தலைநகருக்கு செல்லும் பானர்ஜி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். மேலும், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்து, அவருடன் நல்லுறவைப் பகிர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பானர்ஜி முன்னதாக சனிக்கிழமை புது தில்லிக்கு பயணிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் ஜி20 உச்சிமாநாட்டின் காரணமாக தேசிய தலைநகரில் விமான இயக்கங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டதால் வெள்ளிக்கிழமைக்கு மாற்றியமைக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்வர் மம்தா ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.