ஸ்பெயின் அதிபருக்கு கரோனா: ஜி20 மாநாட்டில் பங்கேற்கவில்லை!

தில்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஸ்பெயின் அதிபருக்கு கரோனா: ஜி20 மாநாட்டில் பங்கேற்கவில்லை!

தில்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

புது தில்லியின், பிரகதி மைதானத்தில் பாரத் மண்டபத்தில் ஜி20 மாநாடு நாளையும், நாளை மறுநாளும் நிகழ உள்ளது. இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இந்தியாவில் வருகை தர உள்ளனர். தில்லி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. 

இந்த நிலையில், இந்தியாவுக்கு வருகை தர இருந்த ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து தில்லியில் நிகழும் ஜி20 மாநாட்டில் அவர் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே ஜி20 மாநாட்டில் பங்கேற்க இயலாது. 

அதேசமயம் துணை அதிபர் நடியா கேல்வினோ, பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் நாட்டின் பிரதிநிதிகளாக ஜி20 மாநாட்டில் பங்கேற்பார்கள் எனத் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே, ரஷிய அதிபர் விளாடிமீர் புதின், தீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கமாட்டார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஸ்பெயின் அதிபரும் பங்கேற்பதை தவிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com