வேலையை விட்டுவிட்டு அரசியலில் சேருங்கள்! உயர் நீதிமன்ற நீதிபதிக்கு திரிணமூல் அறிவுரை!!

வேலையை விட்டுவிட்டு அரசியலில் சேர்ந்துவிடுங்கள் என்று கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய்க்கு திரிணமூல் செய்தித் தொடர்பாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.
குணால் கோஷ்
குணால் கோஷ்

கொல்கத்தா: வேலையை விட்டுவிட்டு அரசியலில் சேர்ந்துவிடுங்கள் என்று கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய்க்கு திரிணமூல் செய்தித் தொடர்பாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும், ஒரு நீதிபதி அரசியலில் ஈடுபட முடியுமா என்று கேள்வி எழுப்பிய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், தனது நீதிபதி என்ற பதவியை அரணாக வைத்துக்கொண்டு எதிர்க்கட்சியினருக்கு உதவும் வகையில், நீதித்துறைக்கு எதிராக செயல்படுகிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

பல கோடி மதிப்புள்ள நான்கு மாடிக் குடியிருப்பை வைத்திருக்கும் சகோதரர்கள் என்று, கரோனா நிவாரண நிதி குறித்த வழக்கு ஒன்றில், நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், தனது கருத்தைப் பதிவு செய்த ஒரு சில மணி நேரங்களில் குணால் கோஷ் இந்த விமரிசனத்தை முன்வைத்துள்ளார்.

தீப்தி சர்கார் என்ற பெண் அளித்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. தனது துவக்கப் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய கணவர், 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி கரோனா பாதித்து மரணமடைந்தார். அவரது இறப்பால், இரண்டு பிள்ளைகளை வளர்க்க முடியாமல் சிரமப்படுவதாகவும், தனக்கு அரசு வேலையும், இழப்பீடும் வழங்க உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுகிறது. அப்படியானால் கரோனா பாதித்து பலியானவர்களுக்கு எவ்வளவு வழங்குவார்கள்? இதுவரை அப்படி யாருக்காவது இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இங்கே ஒரு மருமகன் இருக்கிறார், அவர்களுக்கு நான்கு மாடிக் குடியிருப்பு உள்ளது. அது பல கோடி மதிப்புடையது. அதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வந்தது? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த கருத்தை நீதிபதி எழுப்பிய ஒரு மணி நேரத்துக்குள் திரிணமூல் காங்கிரஸ் இதற்கு எதிர்வினையாற்றியிருக்கிறது. செய்தித் தொடர்பாளர் கோஷ் தனது எக்ஸ் பக்கத்தில், நீதிபதி இருக்கையில் இருந்தால், என்னவேண்டுமானாலும் பேசலாமா? நீதிபதி இருக்கையில் இருந்துகொண்டு அரசியல் செல்வதாக இருந்தால், எதிர்க்கட்சிகளை காக்க முடியுமா? என்றும் கேட்டுள்ளார்.

மேலும், கங்கோபாத்யாய், முன்னாள் மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசுவின் மகன் சந்தன் பாசு பற்றி அதிகம் அறிந்திருப்பார். மருமகன் என்று இந்த விசாரணையின்போது நீதிபதி இவரைத்தான் குறிப்பிட்டாரா? இல்லை, வேறு யாரையேனும் குறிப்பிட்டிருந்தால், அவர் நீதிபதி பதிவியிலிருந்து விலகி, அரசியலில் சேர்ந்துவிடலாம் என்று பதிவிட்டிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com