நவராத்திரி விழா உற்சாகத்தை மகளிர் மசோதா அதிகரித்துள்ளது: மோடி

கொண்டாடப்படவிருக்கும் நவராத்திரி விழாவுக்கான உற்சாகத்தை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நவராத்திரி விழா உற்சாகத்தை மகளிர் மசோதா அதிகரித்துள்ளது: மோடி


கொண்டாடப்படவிருக்கும் நவராத்திரி விழாவுக்கான உற்சாகத்தை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில், பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாராணசியில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கம் கட்டுவதற்கான அடிக்கல்லை இன்று நாட்டினார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. கொண்டாடப்படவிருக்கும் நவராத்திரி விழாவுக்கான உற்சாகத்தை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அதிகரித்துள்ளது

பெண்களின் பெயரில் சொத்துகளை பதிவு செய்வதை பாஜக தொடங்கி வைத்தது. வாராணசியில் பிரதமர் ஆவஸ் யோஜனா திட்டத்தில் பெரும்பாலான வீடுகள் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.  மத்திய அரசின் திட்டத்தில் காசியில் ஆயிரக்கணக்ன பெண்களின் பெயர்களில் வீடுகள் உள்ளன. பெண்கள் பெயரில் சொந்தமாக வீடு உள்ளது அவர்களின் மரியாதையை அதிகப்படுத்தி உள்ளது என்று குறிப்பிட்டார்.

மக்களவை, சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களவை கடந்த புதன்கிழமை இரவு ஒப்புதல் அளித்த நிலையில் மாநிலங்களவையில் வியாழக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டு இந்த மசோதா நிறைவேறியுள்ளது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துவிட்டால் சட்டமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com