வாக்கு எண்ணும் மையங்கள் தயார்!

4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கவுள்ளது.
மத்தியப் பிரதேசம் போபாலில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையம் | PTI
மத்தியப் பிரதேசம் போபாலில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையம் | PTI
Updated on
1 min read

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மிஸோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர்

சத்தீஸ்கரில் 90 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்காக 90 தேர்தல் அதிகாரிகள், 416 உதவி தேர்தல் அதிகாரிகள்,  4596 வாக்கு எண்ணும் நபர்கள் மற்றும் 1698 தேர்தல் பார்வையாளர்கள் தயாராகவுள்ளதாக அம்மாநில தேர்தல் அதிகாரி ரீனா பாபா சாஹேப் கங்காலே தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவுகளை எண்ண 36 மையங்கள் மாவட்டங்களின் தலைநகர்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மையப்படுத்தப்பட்ட செயல்முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேசம்

236 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில், வாக்கு எண்ணும் மையங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வாக்குகள் எண்ணப்படும் நேரத்தில் உள்பகுதியிலும் வெளியிலும் இடையூறுகள் ஏற்படாதிருக்கும் வகையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரித்துள்ளனர்.

தெலங்கானா

தெலங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகளுக்கான தேர்தல் நவ. 25 நடைபெற்றது. இங்கு வாக்கு எண்ணும் மையங்கள் பலத்த பாதுகாப்போடு அமைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் சனிக்கிழமை உறுதி செய்தனர். இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு எண்ணிக்கை தொடங்கவுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் மத்திய காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com