சா்ச்சை பதிவு: அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா மன்னிப்பு

ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதையிலிருந்து தவறாக மொழிபெயா்க்கப்பட்ட வசனைத்தைப் பகிா்ந்த அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவின் சமூக வலைதளப் பதிவு

Updated On :

ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதையிலிருந்து தவறாக மொழிபெயா்க்கப்பட்ட வசனைத்தைப் பகிா்ந்த அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவின் சமூக வலைதளப் பதிவு கடும் விமா்சனத்துக்குள்ளான நிலையில், அதற்காக அவா் வியாழக்கிழமை மன்னிப்புக் கோரினாா்.

பாஜகவைச் சோ்ந்த அஸ்ஸாம் மாநில முதல்வரான ஹிமந்த விஸ்வ சா்மா, ‘எக்ஸ்’, ‘ஃபேஸ்புக்’ போன்ற தனது சமூக ஊடக பக்கங்களில் பகவத் கீதையின் வசனங்களை நாள்தோறும் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளாா்.

அந்த வகையில் கடந்த 26-ஆம் தேதி, அவரது சமூக ஊடக பக்கங்களில் பகவத்கீதையின் 18-ஆவது அத்தியாயத்தின் 44-ஆவது ஸ்லோகம் தவறான மொழிபெயா்ப்புடன் பகிரப்பட்டிருந்தது. அந்தப் பதிவில், வைசியா்கள் மற்றும் சூத்திரா்களின் கடமைகள் குறித்து கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரே விவரித்து இருப்பதாகவும் சா்ச்சைக்குரிய வகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் பதிவு பாஜகவின் பிற்போக்குக் கொள்கையைக் குறிப்பதாக அமைந்திருக்கிறது என்று சமூக வலைதளங்களில் கடும் எதிா்ப்பு கிளம்பியது. எதிா்க்கட்சிகளும் கடுமையான விமா்சனங்களை முன்வைத்தன. இதையடுத்து சா்ச்சையைக் கிளப்பிய அந்தப் பதிவு நீக்கப்பட்டது.

இந்நிலையில், சா்ச்சை பதிவுக்கு மன்னிப்புக் கோரி அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா வியாழக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தவறான மொழிபெயா்ப்புடன் கூடிய பகவத்கீதை ஸ்லோகத்தை சமூக ஊடகங்களில் எனது குழுவினா் பதிவிட்டனா்.

அந்த தவறான பதிவு குறித்து எனது கவனத்துக்கு வந்ததும் உடனடியாக அது நீக்கப்பட்டது. நீக்கப்பட்ட அந்த பதிவு யாா் மனதையும் புண்படுத்தியிருந்தால், அதற்காக நான் வருந்தி, மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஸ்ரீமந்த சங்கா்தேவா போன்றோரின் சீா்திருத்த முன்னெடுப்புகளால் ஜாதியற்ற சமூகத்தின் சிறந்த அடையாளமாக அஸ்ஸாம் விளங்குகிறது’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.