பிகார் மாநிலம் மோதிஹாரியில் பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட விமானத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பழைய ஏர் இந்தியா விமானத்தை லாரியில் எடுத்துச் சென்றபோது, பாலத்திற்கு அடியில் சிக்கிக் கொண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.
விமானத்தை மும்பையில் இருந்து அசாமிற்கு கொண்டு சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்தது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் லாரி மீட்கப்ப்பட்டது.
மேம்பாலத்தின் உயரத்தை லாரி ஓட்டுநர் தவறாகக் கணித்ததனால் விமானம் சிக்கிக்கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
தற்போது, பாலத்தில் சிக்கிக்கொண்ட விமானத்தின் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


