குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

சுயசார்பு கொண்ட இந்தியாவை உருவாக்க வேண்டும்: திரௌபதி முர்மு

இந்தியாவை சுயசார்பு கொண்ட நாடாக்க வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றி வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

புது தில்லி: இந்தியாவை சுயசார்பு கொண்ட நாடாக்க வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றி வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

குடியரசுத் தலைவரின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் இன்று தொடங்கியது. முன்னதாக, நாடாளுமன்றத்தில் உரையாற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குதிரைப்படைச் சூழ குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி வந்தார்.  நாடாளுமன்றத்தில் முக்கிய தலைவர்கள் அவரை வரவேற்றனர்.

பிறகு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் குடியரசுத் தலைவரின் உரையுடன் தொடங்கியது.

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் திரௌபதி முர்மு ஆற்றிவரும் உரையில், இன்று தன்னம்பிக்கையில் உயர்ந்து நிற்கிறது. இதனால், இந்தியாவை இன்று உலகமே உற்று நோக்குகிறது. அதன் கண்ணோட்டமும் மாறியிருக்கிறது. உலகின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வினை இந்தியா வழங்குகிறது. 

தீவிரவாத தாக்குதலில் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியாவில் உறுதியான நிலையான அரசு ஆட்சி செய்து வருகிறது.  இன்று இந்தியாவை உலகமே கண்ணோக்கும் விதம் மாறியிருக்கிறது. நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்திருக்கிறது என்று கூறினார்.

மேலும், ஜல்ஜீவன் திட்டம் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் சுத்தமான குடிநீரைப் பெறுகிறார்கள். மக்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. 2047ஆம் ஆண்டுக்குள் அனைத்துவித நவீன வளர்ச்சிகளையும் அடைந்த பொற்கால இந்தியாவை உருவாக்க வேண்டும்.

2014ஆம் ஆண்டு முதல் நாட்டில் 260 மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு கட்டியிருகிறது. உதான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சிறிய நகரங்களுக்கும் விமானச் சேவை கிடைத்து, அனைவருக்கும் விமானப் பயணம் சாத்தியமாகியிருக்கிறது.

ராஜபாதையை கடமை பாதை என்று பெயர் மாற்றியிருப்பதன் மூலம் அடிமைத்தன அடையாளங்கள் ஒழிக்கப்பட்டுள்ளன.  அரசின் புதிய முயற்சியால் நமது தளவாட ஏற்றுமதி 9 மடங்கு அதிகரித்துள்ளது.

ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருப்பதுடன் அவர்களது ஆரோக்கியமும் சிறப்பாக உள்ளது என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்


மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை (பிப். 1) தாக்கல் செய்கிறாா்.

நடப்பாண்டில் 9 மாநில சட்டப்பேரவைகளுக்கான தோ்தலும், அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலும் நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கியிருக்கிறது.

ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரையாற்றுவது வழக்கம். அதன்படி, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com