
கர்நாடகத்தில் கனமழையை சமாளிக்க அரசு தயாராக உள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களாக கர்நாடகத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்த அறிக்கையில்,
கடலோர கர்நாடகம் மற்றும் வடக்கு கர்நாடகத்தின் சில பகுதிகளில் கனமழையால் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
ஆபத்து பாதிப்புக்குள்ளான பகுதிகளை அரசு மறுஆய்வு செய்துள்ளது. மேலும் பிரச்னைகளைச் சமாளிக்க நன்கு தயாராக உள்ளதாக முதல்வர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மாவட்ட ஆணையர்கள் கனமழையால் பாதிப்பட்டக்கூடிய பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். உள்ளூர் நிர்வாகத்தின் வழிமுறைகளை மக்கள் பின்பற்றுமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.
படிக்க: கார்கில் போரில் வீர மரணமடைந்தவர்களுக்கு தலைவணங்குகிறேன்: பிரதமர் மோடி
இதற்கிடையில், அனைத்து நீர்த்தேக்கங்களிலும் தண்ணீர் அபாய அளவை தாண்டிவருகின்றது. கடலோர மற்றும் மால்னாட் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தக்ஷிண கன்னட மாவட்டத்தில் பன்ட்வால் கிராமத்தில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன. மீனவர்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...