
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52 பேர் கரோனாவால் பாதிக்கப்படுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,464 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: மாநில நலனுக்கு எதிரான எந்த செயலிலும் ஈடுபடவில்லை- ஆளுநர் தமிழிசை
இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 5,31,916 ஆக உள்ளது. புதிதாக கரோனா தொற்று பாதித்தவர்களையும் சேர்த்து நாட்டில் மொத்தமாக 4.49 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை விகிதம் 98.81 சதவிகிதமாக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் விகிதம் 1.18 சதவிகிதமாக உள்ளது. இதுவரை தடுப்பூசி முகாம்கள் மூலம் 220.67 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...