

பாஜக மாநிலங்களவை எம்பி ஹர்த்வார் துபே திங்கள்கிழமை காலை மருத்துவமனையில் காலமானார் என்று அவரது மகன் பிரன்ஷு துபே தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் ஹர்த்வார் துபே. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர், 2020ம் ஆண்டு முதல் மாநிலங்களவை எம்.பி-யாக பதவி வகித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இவர் தனது 74வது வயதில் தில்லியில் உள்ள மருத்துவமனையில் இன்று காலை காலமானார். சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் சிகிச்சைக்காக தில்லிக்கு அழைத்து வரப்பட்டார்.
அவரது உடல் இன்று தில்லியில் இருந்து ஆக்ராவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.