வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மழைக்கால கூட்டத்தொடர்?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் புதிய கட்டடத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
புதிய நாடாளுமன்ற கட்டடம்
Updated On :28 ஜூன் 2023, 8:51 am

DIN

தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் புதிய கட்டடத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி மே 28-ஆம் தேதி திறந்துவைத்தார்.

இந்நிலையில், வருகின்ற ஜூலை 3-வது வாரம் தொடங்கவுள்ள மழைக்கால கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருவதாக கூறப்படுகிறது.

இன்னும் ஓரிரு நாள்களில் மழைக்கால கூட்டத்தொடருக்கான தேதியை நாடாளுமன்ற விவகார அமைச்சகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தாண்டு மழைக்கால கூட்டத்தொடரின் போது, மணிப்பூர் கலவரம், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.