மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மார்ச் 21 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது தில்லி நீதிமன்றம்.
தில்லி கலால் கொள்கை வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கடந்த பிப். 26 ஆம் தேதி கைது செய்தது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரது சிபிஐ காவல் மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மணீஷ் சிசோடியா, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், மீண்டும் விசாரணை மார்ச் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மணீஷ் சிசோடியா வேறு நபர்களின் பெயரில் சிம் கார்டுகள், செல்போன்கள் வாங்கியுள்ளதாகவும் அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது என்று அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுபோல, 10 நாள் காவலில் விசாரிக்கக் கோரிய அமலாக்கத்துறை மனு மீதான விசாரணையில் மார்ச் 17 வரை மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆவின் பால் விநியோகத்தில் அடுத்த வாரம் தட்டுப்பாடு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு

”கும்ப ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

இந்தியச் சரித்திரத்தின் இமாலயத் தவறுகள்

மும்பை இந்தியன்ஸ் பும்ராவை அதிகம் நம்பியிருக்கக் கூடாது: டு பிளெஸ்ஸிஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

