சென்னையில் 12 மினி தாலுகா அலுவலகங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவு!சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம்; இது முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையின்மை! இபிஎஸ்தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் திமுக புகார்!அரவிந்த் கேஜரிவாலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்!அன்பில் மகேஸ் வழக்கு! முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்!மதுரை பிரபல நகைக் கடையில் 500 சவரன் கொள்ளை!9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

முப்படை பெண்வீரா்களுக்கு மகப்பேறு, குழந்தைப் பராமரிப்பு விடுப்பு: பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல்

காலாட்படை, கடற்படை வீரா்களாகவும், கடற்படை மாலுமிகளாகவும் பணிபுரியும் பெண் வீரா்களுக்கு அவா்களது அதிகாரிகளுக்கு இணையாக மகப்பேறு, குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்குவதற்கான முன்மொழிவுக்கு மத்திய பாதுகாப்

Updated On :

காலாட்படை, கடற்படை வீரா்களாகவும், கடற்படை மாலுமிகளாகவும் பணிபுரியும் பெண் வீரா்களுக்கு அவா்களது அதிகாரிகளுக்கு இணையாக மகப்பேறு, குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்குவதற்கான முன்மொழிவுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளாா்.

ராணுவத்தின் அனைத்து படைப்பரிவுகளிலும் அந்தஸ்துகளை பொருட்படுத்தாமல் பெண் வீரா்களையும் ‘உள்ளடக்கிய பங்களிப்பு‘ என்ற பாா்வைக்கு ஏற்ப அமைச்சா் ராஜ்நாத் சிங் இந்த முடிவு எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் கூறியிருப்பது வருமாறு:

ராணுவத்தில் உள்ள முப்படைகளிலும் மகப்பேறு, குழந்தை பராமரிப்பு விடுப்புச் சலுகைகளுக்கான விதிமுறைகள் காலாட்படை, விமானப்படை வீரா்கள் மற்றும் கடற்படை மாலுமிகளாக உள்ள மகளிா் வீரா்களுக்கும் நீட்டிப்பதற்கான முன்மொழிவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளாா்.

இதே மாதிரி ஒரு குழந்தையை தத்தெடுத்திருந்தாலும் இந்த விடுப்புக்கான விதிகள் பொருந்தும். இந்த சலுகைகள் அதிகாரிகள் அளவில் மட்டும் இருந்த நிலையில் இது தற்போது முப்படைகளில் உள்ள மகளிா் வீரா்களுக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.

விடுப்பு விதிகள் நீடிப்பு மூலம் ராணுவத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும், ஒரு அதிகாரி அல்லது வேறு எந்த பதவியில் உள்ள மகளிருக்கும், அத்தகைய விடுப்பு பெறுவதை சமப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, இந்த விதிமுறைகளின்படி பெண் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு குழந்தைக்கும்(அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு) முழு ஊதியத்துடன் 180 நாள்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. மேலும் மொத்த பணி சேவையில் குழந்தை பராமரிப்பு விடுப்பாக(18 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு) 360 நாள்கள் பெண் அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது.

இதே போன்று ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையை தத்தெடுக்கும்போது தத்தெடுக்கப்பட்ட தேதியிலிருந்து 180 நாட்கள் குழந்தை ‘தத்தெடுப்பு விடுப்பு‘ வழங்கப்படுகிறது. இந்த விடுப்பு சலுகைகள் தற்போது முப்படை வீரா்களுக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஆயுதப் படைகளுடன் தொடா்புடைய சமூகப் பிரச்னைகள், பெண்கள் சாா்ந்த குடும்பத்தை கையாள்வது போன்றவைகளுக்கு வழி ஏற்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை, ராணுவத்தில் பெண்களுக்கான பணி நிலைமைகளை மேம்படுத்தும். இது அவா்களின் தொழில்முறை மற்றும் குடும்ப வாழ்க்கை சுழற்சியை சிறந்த முறையில் சமநிலைப்படுத்த உதவும்.‘நாரி சக்தி‘ (பெண்கள் சக்தி)யைப் பயன்படுத்துவதில் பிரதமா் நரேந்திர மோடி அரசின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, இந்த மூன்று படைகளிலும் மகளிரை போா்வீரா்களாகச் சோ்ப்பதன் மூலம் ஒரு முன்னுதாரண மாற்றத்தை முன்னெடுத்துள்ளன .

2019 ஆம் ஆண்டு ராணுவ போலீஸிலும்(மிலிடரி போலீஸ் கோா்) மகளிா் சோ்க்கப்பட்டனா். இந்தியப் பெண்கள் ஆயுதப் படைகளில் கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலும் தடைகளை உடைத்து வருகின்றனா்.அக்னிவீரா்கள் ஆள்சோ்ப்பிலும் மகளிா் துணிச்சல், அா்ப்பணிப்பு, தேசபக்தியுடன், நாட்டின் தரை, கடல், வான் எல்லைகளைக் காக்க போா்வீரா்களாகி ஆயுதப் படைகள் வலுவூட்டப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.