
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 4-ம் கட்ட பட்டியலை அக்கட்சி இன்று (நவம்பர் 7) வெளியிட்டது.
தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தல் நவம்பா் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் களமிறங்கியுள்ளது. பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
தெலங்கானா பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 52 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை பாஜக அக்டோபர் 22-ஆம் தேதி வெளியிட்டது.
அதையடுத்து நவம் 2-ஆம் தேதி 35 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டிருந்த நிலையில் இன்று பாஜக மத்திய தேர்தல் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு ஒரு பெண் உட்பட 12 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: பிகார் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் தடியடி: எதிர்க்கட்சிகள் கண்டனம்!
பாஜக சார்பில் ஹுசனாபாத் தொகுதியில் வேடபள்ளி ஸ்ரீராம் சக்ரவர்த்தியும், வெமுலவாடா தொகுதியில் துலா உமா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
119 தொகுதிகள் அடங்கிய தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ஆம் தேதி எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...