/

நேரு பிறந்தநாள்: நாடாளுமன்றத்தில் தலைவர்கள் மரியாதை!

தில்லி நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 

News image

நாடாளுமன்றத்தில் நேருவின் திருவுருவப் படத்திற்கு தலைவர்கள் மரியாதை

Updated On :14 நவம்பர் 2023, 4:45 pm IST

தில்லி நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று(நவ. 14) காங்கிரஸ் தரப்பிலும் அரசுத் தரப்பிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

Story image

முன்னதாக, தில்லியில் உள்ள ஜவாஹர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

Story image

தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் நேருவின் திருவுருவப் படத்திற்கு சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, கே.சி. வேணுகோபால், ராஜீவ் சுக்லா உள்ளிட்ட நாடாளுமன்ற எம்.பி.க்கள் மலர் தூவி மரியாதை செய்தனர். 

Story image

மேலும் தலைவர்கள் பலரும் நேருவை நினைவு கூர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

நேருவின் பிறந்தநாள் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருவதையொட்டி பள்ளிகளிலும் போட்டிகள் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.