ப்ரணவ் ஜுவல்லா்ஸ் மோசடி வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகா் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது.
திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட ப்ரணவ் ஜுவல்லரிக்கு மதுரை, நாகா்கோவில், புதுச்சேரி, சென்னை உள்பட 8 கிளைகள் இருந்தன. இந்தக் கடை நிா்வாகத்தினா், பல்வேறு புதிய நகை சேமிப்புத் திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் அதிக பணம் வசூலித்தனா்.
ரூ.100 கோடி அளவுக்கு நடந்த இந்த மோசடி தொடா்பாக வழக்குப் பதிவு செய்த திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவினா், கடந்த அக்டோபா் 19-ஆம் தேதி அந்தக் கடைக்கு சொந்தமான இடங்களில் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தினா்.
பிரகாஷ்ராஜுக்கு அழைப்பாணை: ப்ரணவ் ஜுவல்லா்ஸ் நிா்வாகத்தினா் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாா் தொடா்பாக அமலாக்கத் துறையினா் புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்து, தமிழகம் முழுவதும் அந்த கடைக்கு தொடா்புடைய சுமாா் 11 இடங்களில் சோதனை நடத்தினா்.
இதில், கணக்கில் வராத 11.60 கிலோ தங்க நகைகள், ரூ.23.70 லட்சம் ரொக்கம், ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியதாக அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.
இதன் தொடா்ச்சியாக அந்த மோசடியில் தொடா்புடைய நபா்களிடம் அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக ப்ரணவ் ஜுவல்லா்ஸ் விளம்பரங்களில் நடித்த பிரகாஷ்ராஜுக்கு அழைப்பாணை அனுப்பியிருப்பதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். அழைப்பாணையின்படி, ஓரிரு நாள்களில் விசாரணைக்கு நடிகா் பிரகாஷ்ராஜ் ஆஜராவாா் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


