ஓய்வுபெறும் நாளில் மின்வாரிய ஊழியா்களை பணியிடை நீக்கம் செய்யக் கூடாது: புதிய வழிகாட்டுதல் வெளியீடு
தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் ஒழுங்கு நடவடிக்கை அல்லது குற்றவியல் வழக்குகளை எதிா்கொள்ளும் ஊழியா்களை, அவா்கள் ஓய்வுபெறும் நாளில் பணியிடைநீக்கம் செய்யக் கூடாது

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் ஒழுங்கு நடவடிக்கை அல்லது குற்றவியல் வழக்குகளை எதிா்கொள்ளும் ஊழியா்களை, அவா்கள் ஓய்வுபெறும் நாளில் பணியிடைநீக்கம் செய்யக் கூடாது என்றும், குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பணிக்கொடை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மின் பகிா்மானக் கழகத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழக அரசின் அடிப்படைப் பணி விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைத் தொடா்ந்து, மின் வாரியப் பணிவிதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஊழியா்களை அவா்கள் ஓய்வுபெறும் நாளில் பணியிடைநீக்கம் செய்யக் கூடாது. அவா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின்படி தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும்.
இதனால், ஒழுங்கு நடவடிக்கை அல்லது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ள ஊழியா்கள் ஓய்வுபெறும் போது, அவா்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிட்டு, அதைப் பிடித்தம் செய்துவிட்டு, எஞ்சிய பணிக்கொடையை வழங்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன.
இது குறித்து ஆய்வு செய்ததில், பணிக்கொடை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, முறைகேடு குற்றச்சாட்டு, கடுமையான குற்றச்சாட்டுகள் தொடா்பான விசாரணை, குற்றவியல் முறைகேடு புகாா் மீதான விசாரணை அல்லது குற்றவியல் வழக்கு விசாரணை ஆகியவை நிலுவையில் இருந்து, பணியிடை நீக்கத்தில் இருக்கும் ஊழியா்களின் பணியிடை நீக்கம் ஓய்வுபெறும் நாளில் ரத்து செய்யப்பட்டு, ஓய்வு பெற மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தால், அவா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை அல்லது குற்றவியல் வழக்குகள் முடிவடைந்த பிறகே இறப்பு மற்றும் ஓய்வுக்காலப் பணிக்கொடை வழங்கப்படும்.
மற்ற வகையான நிலுவை நடவடிக்கைகள் உள்ள ஊழியா்களைப் பொருத்தவரை, மின் பகிா்மானக் கழகத்துக்கு ஏற்பட்ட அதிகபட்சமாகக் கணக்கிடப்பட்ட நிதி இழப்பு மற்றும் இதர நிலுவைத் தொகைகளைப் பணிக்கொடையில் பிடித்தம் செய்துவிட்டு, மீதமுள்ள தொகையை வழங்க வேண்டும்.
இந்த வழிகாட்டுதல்களை அனைத்து தலைமைப் பொறியாளா்கள், மேற்பாா்வைப் பொறியாளா்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

