சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

விண்ணில் ஏவப்பட்டது ஆதித்யா எல்-1 விண்கலம்!

சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 விண்கலம்  பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் இன்று(சனிக்கிழமை) விண்ணில் ஏவப்பட்டது. 

News image
Updated On :2 செப்டம்பர் 2023, 12:04 pm IST

சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 விண்கலம்  பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் இன்று(சனிக்கிழமை) காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 

சந்திரயான்- 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதையடுத்து சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலத்தை செலுத்தும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) இறங்கியது. 

Story image

விண்கலத்தை ஏவுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.10 மணிக்குத் தொடங்கியது. 

இதையடுத்து, பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து இருந்து இன்று(சனிக்கிழமை) காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 

Story image

ஆதித்யா எல்-1 விண்கலத்தில் சோலாா் அல்ட்ராவைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசா், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டா் உள்ளிட்ட ஏழு விதமான ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றுள்ளன.

பூமியில் இருந்து சுமாா் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்(எல்-1)’ எனும் பகுதியில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான ஈா்ப்பு விசை சமமாக இருக்கும். சுமாா் 1,475 கிலோ எடை கொண்ட ஆதித்யா விண்கலம் 125 நாள்கள் பயணித்து எல்-1 என்ற இடத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கு இருந்தபடி சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிா்வீச்சு, காந்தபுலம் உள்ளிட்டவற்றை அறிவதற்கான ஆய்வுகளை ஆதித்யா விண்கலம் மேற்கொள்ளும். இதன் ஆய்வுக்கருவிகள் 5 ஆண்டுகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

இந்தத் திட்டத்தின் இயக்குநராக தமிழகத்தைச் சோ்ந்த பெண் விஞ்ஞானி நிகா் ஷாஜி பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது. இவா் தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சோ்ந்தவர். 

சந்திரயான்-3 வெற்றியைத் தொடா்ந்து இஸ்ரோவின் அடுத்த சாதனைப் பயணமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, சூரியனை ஆய்வு செய்யும் முயற்சிக்காக இதுவரை அமெரிக்கா, ஜொ்மனி மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு மட்டுமே விண்கலங்களை அனுப்பியுள்ளன. ஆதித்யா எல்-1 திட்டமிட்ட இலக்கை எட்டும்பட்சத்தில் அந்த வரிசையில் இந்தியாவுக்கு தனி இடம் கிடைக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.