சுத்தமான குடிநீராலும் ஆபத்தா? என்னதான் செய்வது??

சுத்தமான குடிநீராலும் ஆபத்து என்றால், எதைத்தான் குடிப்பது என்று மக்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள்.
சுத்தமான குடிநீராலும் ஆபத்தா? என்னதான் செய்வது??

குடிநீர் சுத்திகரிக்கும் ஆர்ஓ இயந்திரங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குடிப்பதுதான் உடல்நலத்துக்கு நல்லது என்று நினைப்பவராக இருந்தால், அதனை மறுபரிசீலனை செய்துகொள்வது நல்லது.

அதாவது, குடிநீரில் இருக்க வேண்டிய அடிப்படை மூலக்கூறுகளை எல்லாம் சுத்திகரிப்பு என்றுச் சொல்லி நீக்கிவிட்ட, அதனை குடிநீராகக் குறைப்பது உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

சுத்தமான குடிநீராலும் ஆபத்தா? என்னதான் செய்வது??
சிசேரியன் செய்து கொள்ளும் ஏழைப் பெண்கள் அதிகரிப்பு: அதுவும்!

ஒருவேளை, ஆர்ஓ தண்ணீரைக் குடிப்பதாக இருந்தால், நிச்சயம், சுத்திகரிக்கப்பட்ட நீரில் கரைந்திருக்கும் திடப்பொருள்களின் அளவு ஒரு லிட்டர் குடிநீருக்கு 200 - 250 மில்லிகிராம் என்ற அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில், அந்த தண்ணீரில், தேவையான அளவு தாதுக்கள், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை அடங்கியிருப்பது உறுதி செய்யப்படும்.

அதாவது, குடிநீரை சுத்திகரிக்கும் இயந்திரங்கள் அனைத்துமே, தண்ணீரில் இருக்கும் அனைத்து தனிமங்களையும் சேர்த்துத்தான் அகற்றிவிடுகின்றன. அதனால், ஒரு குடிநீரை குடிக்கும்போது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் அனைத்துமே கிடைக்காமல் போய்விடுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

சுத்தமான குடிநீராலும் ஆபத்தா? என்னதான் செய்வது??
முதல்கட்டத் தேர்தலில் மோதும் மகாராஷ்டிரத்தின் 5 தொகுதிகள்!

உலக சுகாதார அமைப்பே, ஆர்ஓ இயந்திரங்களுக்கு எதிராகக் கொடி பிடிக்கின்றனவாம். அதாவது, குடிநீர் மூலம் மனிதர்களுக்குக் கிடைக்கும் கால்சியம், மெக்னீசியம் போன்றவை ஆர்ஓ தண்ணீரால் கிடைக்காமல் போகிறது, இவை மனித உடலுக்கு மிகவும் அவசியமான தனிமங்கள். தண்ணீரில் இருக்க வேண்டிய தனிமங்கள் இல்லாமல், அதனை நீண்டகாலத்துக்கு குடிக்கும்போது மனிதர்களுக்குப் பிரச்னைகள் எழலாம் என்றும் எச்சரிக்கிறார்கள்.

செக்கோஸ்லோவேகியா, ஸ்லோவாகியா போன்ற நாடுகளில் ஆர்ஓ தண்ணீர் கட்டாயமாக்கப்பட்ட பிறகு, ஏராளமானோருக்கு தசைகளில் தளர்வு பிரச்னை, உடல் வலி, நினைவாற்றல் குறைதல் போன்ற பிரச்னைகள் அதிகரித்திருப்பதை சுகாதாரத் துறைகள் கண்டறிந்துள்ளன.

ஒரு லிட்டர் குடிநீரில், 30 மில்லி கிராம் கால்சியம், 30 மில்லி கிராம் பைகார்பநேட், 20 மில்லி கிராம் மெக்னீசியம் கலந்திருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது.

தலைமுடி உதிர்வு, எலும்புகளில் பிரச்னை, சரும நோய்கள், மனநிலையில் பிறழ்வு போன்ற பல பிரச்னைகள் ஆர்ஓ தண்ணீரை தொடர்ந்து குடிக்கும்போது ஏற்படுகிறதாம்.

எனவே, மிகவும் சுத்தமான தண்ணீரையும் குடிப்பது நல்லதல்ல என்று ஆய்வுகள் தெரிவித்திருப்பதால், எதைத்தான் குடிப்பது என்று மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com