இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மோடி மீண்டும் பிரதமராக வேண்டி கை விரலை வெட்டிக்கொண்ட பாஜக தொண்டர்

News image
Updated On :8 ஏப்ரல் 2024, 8:09 am

DIN

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெற வேண்டி கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர் தனது கை விரலை வெட்டி காளி தேவிக்கு காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

கர்நாடக மாநிலம், சோனார்வாடாவைச் சேர்ந்தவர் அருண் வெர்னேகர்(50). தீவிர பாஜக தொண்டரான இவர் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு காளி தெய்வத்துக்கு ரத்தக் காணிக்கை அளிக்க நினைத்துள்ளார்.

இந்த நிலையில் அருண் வெர்னேகர் நேற்று முன்தினம் திடீரென தனது ஆள்காட்டி விரலை வெட்டி காளி தேவிக்கு காணிக்கையாக செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மோடி மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக காளி மாதாவை வேண்டிக் கொண்டேன்.

மேலும் எனது ஆள்காட்டி விரலை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினேன். மோடி என் தலைவர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் அவரது விரலை மீண்டும் ஒட்டவைக்க முடியாதென மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இதனிடையே இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என மக்களுக்கு பாஜக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.