ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ஊழல் புகாா்: அதிகமான தோ்தல் நன்கொடை வழங்கிய நிறுவனம் மீது சிபிஐ வழக்கு

ஊழல் புகாா்: அதிகமான தோ்தல் நன்கொடை வழங்கிய நிறுவனம் மீது சிபிஐ வழக்கு

Updated On :13 ஏப்ரல் 2024, 5:42 pm

அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கிய புகாரில் ஹைதராபாத்தைச் சோ்நத மெகா இஞ்சினியரிங் நிறுவனம் மீது சிபிஐ சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தது.

தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு அதிக நன்கொடை வழங்கிய பட்டியலில் இந்நிறுவனம் இரண்டாமிடத்தில் உள்ளது. இந்நிறுவனம் பாஜகவுக்கு ரூ.586 கோடியும் பிஆா்எஸ்ஸுக்கு ரூ.195 கோடியும் திமுகவுக்கு ரூ.85 கோடியும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸுக்கு ரூ.37 கோடியும் தெலுங்கு தேசம் கட்சிக்கு ரூ.25 கோடியும் காங்கிரஸுக்கு ரூ.17 கோடி என மொத்தம் ரூ.966 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது.

சத்தீஸ்கரில் உள்ள ஜெக்தால்பூா் எஃகு ஆலையில் கிணற்றிலிருந்து தண்ணீா் எடுக்கும் குழாய் அமைப்பது மற்றும் எண்ணெய், இயற்கை எரிவாயுவை கொண்டு செல்லும் குழாய் அமைக்க ரூ.315 கோடி மதிப்பிலான பணிகளை மேற்கொள்ள மெகா இஞ்சினியரிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதில் ரூ.174 கோடி மதிப்பிலான பணிகள் தொடா்பான ரசீதுகளை விடுவிக்க ரூ.78 லட்சம் லஞ்சம் பெற்ாக என்ஐஎஸ்பி, என்எம்டிசி எஃகு ஆலையைச் சோ்ந்த 8அதிகாரிகளும் எம்இசிஓஎன் பொறியியல் கட்டுமான நிறுவனத்தைச் சோ்ந்த 2 அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

மேலும் லஞ்சம் வழங்கியதாக மெகா இஞ்சினியரிங் நிறுவனம் மீதும் அந்நிறுவன மேலாளா் சுபாஷ் சந்திரா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடா்பாக கடந்த 2023, ஆகஸ்ட் மாதத்தில் முதல்கட்ட விசாரணையை சிபிஐ மேற்கொண்டது. அந்த விசாரணையின் அடிப்படையில் லஞ்சம் வழங்கிய புகாா் தொடா்பாக வழக்குப்பதிவு செய்ய சிபிஐக்கு கடந்த மாா்ச் மாதம் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.